ருவென்வெல்ல ஸ்டின்போட் தோட்ட அம்மன் ஆலய புனர்நிர்மாணத்திற்கு நிதியுதவிக்கோரல்!!

0
113

ருவென்வெல்ல ஸ்டின்போட் தோட்ட அம்மன் ஆலய புனர்நிர்மாணத்திற்கு நிதியுதவிக்கோரல்கேகாலை மாவட்டம் ருவென்வெல்ல வஹகுல பிரிவில் ஸ்டின்போட் தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனர்நிர்மாணப் பணிக்காக நிதி சேகரிக்கப்பட்டு வருகின்றது. ஸ்டின்போட் தோட்ட குடியிருப்புக்கு மத்தியில் இவ்வாலயம் எழில்கொஞ்சும் இயற்கை
காட்சியாக அரசமரமும் ஆழமரமும் இணைந்த தோற்றத்தில் சமாந்தர பூமியில் அமைந்துள்ளது.

60 வருட பழைமை வாய்ந்த இந்த ஆலயம் அம்மனின் மகிமை பெற்றதும் வேண்டியவர்களுக்கு வரம் அளிக்கும் சிறப்பு வாந்ததுமாகும். 1949 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இவ்வாலயம் அன்று தொடக்கம் 1956ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சிறிய மண் கோயிலாகவே காட்சி தந்தது. சாதாரண அமைப்பில் இருந்த இவ்வாலயத்தினை தோட்ட மக்கள் ஒன்றினைந்து 1956ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பொது
மக்களின் பொருள் நிதியுதவியுடன் ஆலமரமருகில் திருத்தலமாக அமைக்கப்பட்டது.

1969ஆமத் ஆண்டு காலப்பகுதிகளில் இவ்வாலய உற்சவத்தின்போது வீரபத்திரர் விளையாட்டு காமன் கூத்து பொய்க்கால் குதிரை ஆட்டம் யானை ஆட்டம் என்பன சிறப்பாக இடம்பெற்றுவந்துள்ளது.

அதன்பின் 1998ஆம் ஆண்டு பொது மக்களின் ஒத்துழைப்போடு ஆலய புதிய நிர்வாக சபை உருவாக்கப்பட்டது. புதிய நிர்வாக சபையினரும் பொதுமக்களும் இணைந்து இவ்வாலயத்தை ஆகம முறைப்படி அமைப்பதற்கு முடிவெய்தி அதற்கான கட்டுமானப் பணிகள்
ஆரம்பிக்கப்பட்டது.

IMG_4273 IMG_4274 IMG_4275

இருந்தபோதிலும் அதற்கான செலவீனம் கால மாற்றத்திற்கு ஏற்பவரவை மிஞ்சியதாக உள்ளதால் தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அம்மன் அருளினால் ஆலயம் சிறப்பாக இந்திய சிற்பிமார்களைக்கொண்டு ஆகம முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில பணிகள் மாத்திரமே எஞ்சியுள்ளது. எனவே இவ்வாலயத்தினை கட்டிமுடிக்க கிட்டதட்ட 15 இலட்சம் ரூபா செலவீனம் ஏற்படவுள்ளதால்
இடைநிறுத்தப்பட்ட கட்டுமானப் பணியை முன்னெடுப்பதற்கு தங்களால் இயன்ற நிதி உதவியையோ
அல்லது பொருட்களையோ வழங்கி இறைப்பணியில் தம்மை ஈடுப்படுத்தி அம்பாளின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பணமாக நிதியுதவி செலுத்துபவர்கள் கணக்கு இலக்கம் 4235266 இலங்கை வங்கி ருவென்வெல்ல
கிளை எனும் ஆலய பற்றுக்கணக்கில் வரவு செலுத்தலாம்.

நிதி உதவி செய்பவர்களும் பொருள் உதவி செய்பவர்களும் கே.ஜெகநாதன் (செயலாளர்)-0779866447ரூபவ் சிவகுமார் (தலைவர்) –
0767161533 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக்கொள்ளலாம்.

 

(அவிசாவளை நிருபர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here