ரூபா 1200 அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு இணக்கம்

0
72

ஜனாதிபதியும், தொழில் அமைச்சரும் விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஆயிரத்து 200 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக பெருந்தோட்ட நிறுவனங்களின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.

1200 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் ஊழியர் சேமலாப நிதியம் , ஊழியர் நம்பிக்கை நிதியம் அடங்கலாக 1380 ரூபா தோட்டத் தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளப் பொதியாகக் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.

மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோ கொழுந்திற்கு 60 ரூபாவை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை எழுத்து மூலம் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் கையளித்ததாகவும் அவர் கூறினார்.

ஏற்கனவே, ஒரு கிலோ கொழுந்திற்கு 40 ரூபா வழங்கப்பட்டதாகவும் தற்போது மேலதிகமாக 20 ரூபாவை அதிகரித்து வழங்குவது 50 வீத அதிகரிப்பு எனவும் ரொஷான் ராஜதுரை சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 350 ரூபா வழங்கப்படும் எனவும், விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் என நாளொன்றுக்கான மொத்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here