ரூபா 70 ஐ தாண்டியது முட்டை விலை – மக்கள் கடும் விசனம்

0
72

முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நுகர்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தற்போது முட்டை ஒன்றின் விலை 65 முதல் 70 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

முட்டையின் விலை அதிகரிப்பால் உணவுக்கு முட்டைகளை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமைகள் காரணமாக சிறு பிள்ளைகளுக்கு கூட முட்டைகளை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேவைக்கு ஏற்ப முட்டை இருப்பு இல்லாததாலும், இருப்பு உள்ள முட்டையின் விலை அதிகரித்துள்ளதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பல முட்டை வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்தியாவில் முட்டையின் மொத்த விற்பனை விலை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உணவு இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும், அவற்றை இறக்குமதி செய்யும் முறை தொடர்பில் இதுவரை விளக்கமளிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here