ரூ. 1700 வேண்டும்: பசறையில் போராட்டம்

0
40

தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பசறை எல்டப் கிகிரிவத்தை தோட்ட தொழிலாளர்கள் இன்றைய தினம் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 9. 30 மணியளவில் எல்டப் கிகிரிவத்தை தோட்ட காரியாலயத்திற்கு முன்பாக குறித்த அமைதி வழி போராட்டம் இடம்பெற்றது.அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைய தங்களுக்கு உடனடியாக 1700 ரூபாய் சம்பளத்தை வழங்குமாறு அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இவ் அமைதி வழி போராட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் அசோக் குமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாநில இயக்குனர் கனகராஜ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலய உத்தியோகத்தர்களும் அவ்விடத்துக்கு வருகை தந்ததோடு தோட்ட உயர் அதிகாரியுடன் பேச்சு வார்த்தையிலும் ஈடுப்பட்டனர்.

ராமு தனராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here