குருதேவ ஸ்ரீ சுவாமி சின்மயானந்தர் அவர்களின் ஆன்மீக பணிகளையும் உயர்ந்த சமூக நோக்குடன் அவரது ஞான வழி காட்டல்களையும் ஆன்மீக சிந்தனைகளையும் வேதாந்த சிந்தனைகளையும் இலங்கையில் குறிப்பாக மலையத்தில் பரப்புவதற்கே ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலயம் அமைத்து சின்மயா மிஷன் ஆரம்பிக்கப்பட்டது. இதனை உணர்ந்து ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் மலையகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவாரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் இதற்கான காணியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தார். அவரின் அரசியல் பலத்தால் அரசாங்கத்தின் பல உதவிகள் உடனுக்குடன் அப்போது கிடைத்தது. ஆலயம் அமைக்க மலையகத்தை சேர்ந்த பலர் பல உதவிகளையும் செய்தனர். தோட்ட தொழிலாளர்கள் ஆஞ்சநேயர் மேல் கொண்ட பக்தியின் காரணமாக ஒரு நாள் சம்பளத்தை கொடுத்த அதே நேரம் பல சிரமதான பணிகளிலும் ஈடுபட்டனர்.பொதுவாக மலையகத்தில் உள்ள மக்களுக்கும் இளைஞர் யுவதிகளுக்கும் ஆன்மீகம் தொடர்பான விழிப்பு கட்டாயம் தேவை. இதனாலேயே சின்மயா மி~ன் மலையகத்தில் இறம்பொடை தவலந்தனi;ன வேவண்டன் தோட்ட பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலப்பகுதியில் இவை முறையாக நடைபெற்றன. இதனால் பயன் பெற்ற இளைஞர் யுவதிகள் மலையத்தில் இன்று பல்வேறு அபிவிருத்தி நிலையில் உள்ளனர்.
ஆனால் தற்போது இவை கைவிடப்பட்டுள்ளது. ஒரு சில விடயங்கள் நடைபெற்றாலும் மலையகம் சார்ந்தவர்களை இணைத்துக் கொள்வது குறைவு. சின்மயா மி~னின் ஆயுற்கால உறுப்பினர்களாக பலர் காணப்பட்ட போதும் அவர்களை நிர்வாகத்துடன் இணைத்துக் கொள்வதில்லை. நிர்வாகத்தில் இருந்தவர்களையும் பொய் குற்றசாட்டுகளை சொல்லி வெளியில் போட்டு விட்டனர். மி~னில் வேதாந்தம் கற்பிக்க வேண்டிய நிலையில் அறநெறியும் பாலர் பாடசாலை நடாத்துவது மாத்திரம் தான் நடைபெருகின்றது. இவை எல்லா இடங்களிலும் நடைபெருகின்ற ஒன்று தான்.
ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கான சிறார்கள் இங்கு அறநெறி படித்தார்கள் தற்போது சொற்சமானவர்களே பயின்று வருகின்றார்கள். இவர்களுக்கும் சீருடை இல்லை. பாலர் பாடசாலையில் கல்வி கற்பவர்களிடம் பணம் அறவிடப்படுகின்றது. ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கட்டப்பட்ட அன்னபூரணியில் ஒரு நேர சாப்பாடு 605. ரூபாய் கோப்பி 132. ரூபாய் இங்கு போய் தோட்ட தொழிலாளர்கள் உட்பட பாமர மக்கள் எப்படி உண்பார்கள். தோட்ட தொழிலாளியின் நாள் சம்பளமே 600. ரூபாய் தான் அப்படி என்றால் அன்னபூரணி எப்படி வியாபாரமானது ஒரு போத்தலட தண்ணிர் கூட அதிக விலையில் விற்கப்படுகின்றது.
இளைஞர் யுவதிகள உட்பட பெரியோர்கள் தங்கி இருந்து ஆன்மீகம் கற்க கட்டபட்ட விடுதியின் அறைகள் தற்போது வெளியாருக்கு வாடகைக்கு விடப்படுகின்றது. இந்த அறைகளில் பல்வேறு கூத்து கும்மாளங்கள் நடைபெருகின்று. அத்துடன் ஆலய வளாகத்தில் மது பாவனை புகை பிடித்தல் காதலர்கள் சந்திப்பு போன்றனவும் நடைபெருகின்றது. பொது நிதியில் கட்டப்பட்ட விடுதிக்கு தலைவரின் அம்மாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. . இங்குள்ள வளங்கள் அனைத்தும் பாவித்து பெரும் தொகையான பணம் சம்பாதிக்கப்படுகின்றது. அது மட்டும் அல்ல சின்மயா மிஷன் செயலாளர் சிங்கள இனத்தை சேர்ந்த ஒரு கிருஸ்த்தவர். இதுவா சமய பனி. இந்த செயற்பாடுகள் குருதேவ ஸ்ரீ சுவாமி சின்மயானந்தரின் எண்ணத்தை குப்பையில் போட்டதாக கருதபடுகின்றது.
இந்த சின்மயா மி~ன் வலாகத்தில் வதிவட பிரம்மச்சாரியாக திவ்வியவதனி அம்மையார் காணப்படுகின்றார். அவருக்கும் ஆன்மீக செயற்பாடுளை செய்ய தடைவிதிக்கப்படுகின்றது. இவரும் ஒரு மலையத்தை சேர்ந்த பிரம்மச்சாரியாகும் அதே போல் கண்டியில் பிரம்மச்சாரி கார்த்திக் சைத்தன்யா அவர்கள் வாடகை வீடு ஒன்றில் தங்க வைத்து சேவை செய்து வருகின்றார். இவரும் முறையாக இந்தியா சின்மயா மி~ன் சென்று படித்து பிரம்மச்சாரியான ஒரு மலையகத்தவர். இவருக்கும் இறம்பொடை சின்மயா மி~னில் சேவை செய்ய முடியாது. இவர் மலையக இளைஞர் யுவதிகள் உட்பட ஏனைய பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வதிவிட செயல் அமர்வு நடாத்த மி~னின் விடுதியை பாவிப்பதற்கு 60 பேருக்கு 260.000.00 ரூபா கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது சின்மையா மி~னுள்N;ளயே. சின்மயா மி~னில் நடைபெரும் இந்த பயிற்சி செயல் அமர்விற்கு மேற்படி இளைஞர் யுவதிகள் பங்கு கொள்வதற்கு மலையகத்தில் உள்ள வர்த்தகர்களிடம் பண உதவி கேட்கின்றார்கள். ஏன் என்று கேட்டால் தங்குமிடத்திற்கு சின்மயா மி~ன்க்கு கட்டுவதற்காக.
அப்படி என்றால் கோயில் வருமானம் அன்னபூரனி வருமானம் விடுதி வருமானம் சின்மையா மி~னுக்கு கிடைக்கும் நன்கொடைகள் போன்ற வருமானங்கள் எங்கே. நிர்வாகத்தினால் சமர்பிக்கப்படும் கணக்குகளிலும் பாரிய பிழைகள் காணப்படுகின்றன. இங்கு தேடப்படும் வருமானங்கள் இங்குள்ள பிரதேச மக்களுக்கு எந்த விதமான சேவையும் இல்லை அனைத்தும் வேறு பிரதேசங்களுக்கே செல்கின்றது.
அப்படி என்றால் கோயில் வருமானம் அன்னபூரனி வருமானம் விடுதி வருமானம் சின்மையா மி~னுக்கு கிடைக்கும் நன்கொடைகள் போன்ற வருமானங்கள் எங்கே. நிர்வாகத்தினால் சமர்பிக்கப்படும் கணக்குகளிலும் பாரிய பிழைகள் காணப்படுகின்றன. இங்கு தேடப்படும் வருமானங்கள் இங்குள்ள பிரதேச மக்களுக்கு எந்த விதமான சேவையும் இல்லை அனைத்தும் வேறு பிரதேசங்களுக்கே செல்கின்றது.மேற்படி விடங்களை மலையகம் சார்ந்த ஆயுட்கால உறுப்பினர்கள் தட்டி கேட்பதினாலேயே பிரச்சனை தோன்;றி உள்ளது. இதை பெரிதாக்காமல் பேச்சு வார்த்தை மூலம் முடிக்கலாம் என்று இருக்கையில் நிர்வாகத்தினர் சம்பந்தபட்டவர்களிடம் பேசாமல் பத்திரிகை அறிக்கை விடுத்துள்ளனர். வீட்டு பிரச்சனையை வீட்டுக்குள்ளயே தீர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது இந்த விடயம் தொடர்பில் பிரச்சனைகள் வெளியில் வந்துள்ளதால் உன்மையான விடயங்களை வெளி கொண்டு வர வேண்டி உள்ளது.
இந்தியா தலைமை காரியாலயத்தின் சர்வதேச சின்மயா மி~னின் தலைவர் சுவாமி சொரூபாநந்தா அவர்கள் 01.01.2018 இலங்கைக்கு வருகின்றார் இவர் தொடர்ந்து 13 நாட்கள் இறம்பொடை தவலந்தனi;ன வேவண்டன் தோட்டத்தில் அமைந்திருக்கும் சின்மயா மி~னில் தங்க உள்ளார் அவரிடமும் இந்த விடயங்களை தெரிவிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அது மட்டுமல்லாது இந்திய உயர்ஸ்தானிகருக்கும் முறையிட உள்ளனர். இந்தியாவின் அமைப்பு ஒன்று இலங்கையில் செயற்படும் போது அது இந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து செயற்பட வேண்டும். இனங்களுக்கு இடையேயும் நாட்டுக்கு இடையேயும் முரண்பாடு வரும் வகையில் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்பட்டால் இந்திய உயர்ஸ்தானிகர் இதில் தலையிட முடியும். இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம் இலங்கையில் கண்டியில் முதல் முதல் திறந்தது மலையக மக்களுக்காவே.
அத்துடன் சின்மயா மி~ன்; இலங்கை ஜனநாயக சோஸலிச குடியரசின் பாராளுமன்றத்தின் 28 இலக்க சட்டத்தின் கீழ் 1981 ஆண்டு பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். அந்த சட்டத்தில் என்ன கூறப்பட்டிருக்கின்றதோ அதன் படி செயற்பட வேண்டும். அதனால் பாராளுமன்ற செயலாளருக்கும் அறிவிக்கப்படவுள்ளது. இந்த பிரச்சனை தற்போது பூதாகாரமாக வெளியேறி விட்டதால் மலையக அரசியல்வாதிகளின் உதவிகளையும் மக்களின் உதவிகளையும் பெருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எது எவ்வாறாயினும் மலையக மக்களை கொச்சப்படுத்திக் கொண்டு மலையகத்தில் ஒரு அமைப்பு இயங்குவதை பார்த்துக் கொண்டு இருக்க மலையக மக்கள் முட்டாள்களாக இருக்க மாட்டார்கள்.
குறிப்பு- இந்த பகிரங்க மடல் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கருத்துக்கள் பாரபட்சமின்றி இங்கு பிரசுரிக்கப்படும்.