வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொசாலை பகுதியில் ஐக்கிய தேசிய கட்சி பட்டியல் பெண் வேட்பாளர் ஒருவரை அப்பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் போட்டியிடும் ஆண் வேட்பாளர் ஒருவர் குறித்த பெண் வேட்பாளரை அச்சுறுத்தல் செய்ததாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ ஸ்ரீதரன் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் இன்று 09 ம் திகதி இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் வேட்பாளர் ரொசாலை பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த போது, குறித்த ஆண் வேட்பாளர் பெண்ணை மறித்து தகாத வார்த்தைகளால் பேசியதோடு, அச்சுறுத்தியதாகவும் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
க.கிஷாந்தன்