லண்டனில் சிகரெட்டை அணைக்காமல் தூக்கி வீசியதால் அடுக்குமாடி வீட்டில் தீவிபத்து

0
90

Camberwellன் கடோர் வீதியில் உள்ள ஆறு மாடி கொண்ட அடுக்குமாடி வீட்டில் தீவிபத்து.Camberwellன் கடோர் வீதியில் உள்ள ஆறு மாடி கொண்ட அடுக்குமாடி வீட்டின் ஐந்தாவது மாடியில் தான் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது.

தீவிபத்து காரணமாக ஏற்பட்ட புகையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்ட நபர் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தீயை அணைக்க 25 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர்.

சிகரெட்டை அணைக்காமல் அப்படியே பாதுகாப்பாற்ற முறையில் தூக்கி வீசியதே தீவிபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.

லண்டன் தீயணைப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், புகைப்பிடித்த பிறகு உங்கள் சிகரெட் முழுவதுமாக அணைக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால், அந்த நெருப்பு உங்களின் பொருட்கள், உடமைகளை மட்டுமின்றி உயிரையும் எடுத்துவிடும்” என எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here