லபுக்கலையில் கார் விபத்து ஒருவர் பலி!

0
98

அநுராதபுரத்தில் இருந்து வேலைத்தளத்தை நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகி ஒருவர் பலியாகியுள்ளார்.
இன்று அதிகாலை 3.00 மணியளவில் அநுராதபுரத்தில் இருந்து புறப்பட்டு வந்த கார் நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லபுக்கலை கொண்டகலை பகுதியில் பாரிய பள்ளத்தில் விழுந்து விபத்துள்ளாகியுள்ளது.

காரில் பயணம் செய்த ஹர்ஷ என்பரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தார். அவரது மனைவியும் மகளும் அதிர்ஷ்டவசமாக காரின் கதவு திறந்து தூக்கி எறியப்பட்டதில் காயங்களுடன் உயர் தப்பினர். இவர்கள் இருவரும் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் நுவரெலியா ஆதார வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்திற்கு காரணம் குறித்த நபரின் நித்திரையின் காரணமாகவே இடம்பெற்றது என பொலிஸ் வட்டாரங்கள் சந்தேகிக்கின்றனர். நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

டீ. சந்ரு
நானுஓயா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here