லயன் அறையில் இருந்து இளம் தாயும், குழந்தையும் சடலங்களாக மீட்பு

0
30

இரத்தினபுரி – அலபத பிரதேசத்தில் லயன் குடியிருப்பொன்றில் அறையில் இருந்து இளம் தாய் மற்றும் அவரது சிறு மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனப் பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பெண் தனது மகனைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட் டுள்ள பொலிஸார், 21 வயதுடைய தாயும் 02 வயதுடைய சிறுவனும் உயிரிழந்துள்ளனர் எனக் கூறியுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியமை தெரியவந்தது.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் அலபத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here