லயன் என்ற நாமத்தை உடைந்தெரிந்து புதியகிராமங்கள் என்ற நாமத்தை உறுவாக்கிகொண்டிருக்கின்றோம்!!

0
116

இந்தியா அரசாங்கத்தால் வழங்கபடுகின்ற வீடமைப்பு திட்டத்தை மக்கள் மத்தியில் நாங்கள் தான் செய்தோம் என பிரச்சாரம் செய்வதில்லை இந்தியஅரசாங்கம் அமைத்து கொடுத்ததாகத்தான் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறோம்அமைச்சர் பழனிதிகாம்பரம் மடக்கும்புற தோட்டத்தில் தெரிவிப்பு

இந்தியா அரசாங்கத்தினால் வழங்கபடுகின்ற வீடமைப்பு திட்டங்களை மக்கள் மத்தியில் சென்று நாங்கள் தான் செய்தோம் என பிரச்சாரம் செய்ததில்லை இந்திய அரசாங்கமே இந்த வீடமைப்ப திட்டங்களை மேற்கொள்வதாக மக்கள் மத்தியில் நாங்கள் பேசிவருகிறோம் என மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். தலவாகலை மடக்கும்புற மேற்பிரிவு தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் 250தனி வீட்டு திட்டத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய போதே இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் உறையாற்றிய அமைச்சர் லயன் என்ற நாமத்தை உடைந்தெரிந்து புதியகிராமங்கள் என்ற நாமத்தை நாங்கள் உறுவாக்கிஇருக்கின்றோம் 2020-ம் ஆண்டளவில் இந்திய அரசாங்கத்தினால் வழங்கபட்டுள்ள அனைத்து வீடுகளையும் அமைத்து மக்களின் பாவனைக்கு கையளிப்போம் என தெரிவித்தார் இலங்கை நாட்டின் மீது எங்களுக்கு எவ்வாறு விசுவாசம் இருக்கின்றோதோ அதேபோல்தான் இந்திய நாட்டின்  மீதும் நாங்கள் விசுவாசமாக இருக்கின்றோம். எமது மக்கள் யாரும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை இன்று என்னால் முன்னெடுக்கபடுகின்ற வீடமைப்பு திட்டத்தினை பொறுத்து கொள்ள முடியாதவர்களுக்கு இன்று மனகஷ்டம் படுகிறார்கள் எனவே மலையக உறவுகள் அனைவருக்கு வீடுகள் அமைத்து கொடுக்கபடுமெனவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தொழில்புரிவர்களுக்கு மாத்திரம் தான் நிலம் வீடு தகரங்கள் என்பன வழங்கபட்டது. ஆனால் நாங்கள் அனைவருக்கும் வீடு தகரங்கள் காணி போன்றவற்றை வழங்கி வருகிறோம் கடந்த காலங்களில் இருந்த அமைச்சர்கள் கட்சிபார்த்து சேவைசெய்தார்கள் மலையகத்தில் உள்ள மக்கள் எமது உறவுகள் எமது இரத்தங்கள் எமது மக்கள் வேறு வேறு அமைப்புகளில் இருந்தாலும் நாங்கள் அனைவருக்கும் சேவையை முன்னெடுப்போம்

இதேவேலை இநத்திய அரசாங்கத்தினால் வழங்பட்டுள்ள 4000வீடுகளில் 1500வீடுகளை கட்டி முடித்திருக்கின்றோமெனவும் குறிப்பிட்டார்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here