லயன் குடியிருப்பு வாழ்க்கையை இல்லாதொழித்தால் மாத்திரமே மலையக மக்கள் சுபீட்சத்தை காணமுடியும்! : சோ.ஸ்ரீதரன்

0
130

மலையக மக்கள் 200 வருடங்களைத்தாண்டியும் இன்றும் அதே லயன் அறைகளிலும்இ தற்காலிக குடில்களிலுமே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலை மாற்றமடைந்து லயன் முறை முற்றாக இல்லாதொழித்தால் மாத்திரமே மலையக மக்கள் தங்கள் சுபீட்சத்தை அடைந்து கொள்ள முடியுமென மத்திய மாகாண சபை உறுப்பினரும்இ தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். டிக்கோயா டிலரி தோட்டத்திற்கு விஜயம் செய்து அங்கு தற்காலிக குடில்களில் வாழ்ந்த மக்களை அமைச்சர் திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கிணங்க பார்வையிட சென்று அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

மலையக மக்கள் இந்நாட்டின் பொருளாதார முதுகெலும்புகளாக இருந்தாலும் கூட இன்றும் அவர்கள் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இவர்களுக்கென அமைத்துக்கொடுக்கப்பட்ட அந்த லயன் அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இன்றும் கூட பல லயன் அறைகளுக்கு 100 – 150 வருடங்களுக்கு முன் போடப்பட்ட கூரைத்தகடுகளே காணப்படுகின்றது. சல்லடை போன்று சேதமடைந்த நிலையிலேயே அவை காணப்படுகின்றன.

இதனால் மழைக்காலங்களில் தோட்டத் தொழிலாளர்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

அதே வேளை இன்று தோட்டப்புறங்களில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப அவர்களுக்கு வீட்டு வசதிகள் காணப்படவில்லை.

பல குடும்பங்கள் ஒரே லயன் அறைகளுக்குள் வாழும் அதேவேளை லயன்களுக்கு அருகிலும் தமது மறக்கரி தோட்டங்களிலும் தற்காலிக குடில்களை அமைத்தே எம் மக்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். இத்தற்காலிக குடில்களில் பெரும்பாலானவை மூங்கிலால் வேயப்பட்ட சுவர்களையும்இ பொலித்தீனால் அமைக்கப்பட்ட சுவர் மற்றும் கூரையை கொண்டதாகவும் காணப்படுவதால் இவை மழைக்காலங்களில் வாழமுடியாத சூழலையே கொண்டு காணப்படுகின்றது.

தோட்டங்களில் தொழிலாளர்களாக வாழ்கின்ற இவர்களில் பெரும்பாலானோருக்கு தோட்டங்களில் வீடு கட்டுவதற்கு இடங்களும் வழங்கப்படுவதில்லை. இதுவரை இவர்களின் உழைப்பு மாத்திரமே தேவையான இருக்கின்றதே தவிர இவர்களுக்குரிய தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க யாரும் முன்வரவில்லை.

என்றாலும் கூட எமது அமைச்சர் திகாம்பரம் அவர்கள் அமைச்சராக பதவியேற்று சொற்ப காலத்திலேயே மலையக மக்களுக்குரிய தனிவீட்டுத்திட்டத்தை ஏற்படுத்தி இன்று பல்வேறு பிரதேசங்களில் வாழும் எமது மலையக சொந்தங்களுக்கு அத்தனிவீடுகளை எதுவித கட்சி பேதமுமின்றி மலையக மக்களின் வாழ்வு சுபீட்சம் பெற வேண்டும் என்பதற்காக பகிர்ந்தளித்து வருகின்றார்.

டிக்கோயா டிலரி தோட்டத்திற்கும் இவ்வாறு குடில்களிலும்இ குடிசைகளிலும் வாழும் மக்களுக்கும் தனி வீடுகள் நிச்சயம் வெகு சீக்கிரத்தில் அமைத்துக் கொடுக்கப்படும். அதே வேளை எல்லா மலையக மக்களுக்கும் இத்தனிவீடுகள் அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசியல்வாதிகள் வழங்குகின்ற பொய்யான வாக்குறுதிகளைத் தாண்டி அமைச்சர் திகாம்பரம் இன்று பாரிய முன்னோடியாக திகழ்ந்து மலையக மக்களுக்கென சொந்தமாக தனிவீட்டுத்திட்டத்தினை ஏற்படுத்தி இன்று அவற்றில் பல நூற்றுக்கணக்கான வீடுகளில் மக்கள் வாழ்வதற்கும் வழி செய்துள்ளார்.

புதைக்கப்பட்டு போன மலையக மக்கிளன் வாழ்வை மேம்படுத்தும் பத்தாண்டுத் திட்டத்தையும் புதுமைப்படுத்தி ஐந்தாண்டு திட்டமாக தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றார். இவ் ஐந்தாண்டு திட்டத்தின் ஊடாக மலையக மக்களின் உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய வசதிகளும் பூரணப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதார முதுகெழும்பான எம் மக்கள் சுபீட்சத்துடன் வாழ வழி செய்து வருகின்றார். எனவே வாக்களித்த மக்களுக்காக தன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே தலைவராக அமைச்சர் திகாம்பரம் காணப்படுகின்றார்.

வாக்களித்த மக்கள் தங்கள் போட்ட வாக்குகளிக்காக சிந்திக்கும் போது அமைச்சர் திகாம்பரத்திற்கு வாக்களித்தவர்கள் சிந்திக்க தேவையில்லை ஏனெனில் அமைச்சர் திகாம்பரம் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களையும் தாண்டி மலையக மக்களின் சுபீட்சத்துகாக செயற்பட்டு வருகின்றார்.

எனவே அமைச்சர் திகாம்பரத்தின் கரங்களை நாம் பலப்படுத்தும் போது மலையக மக்களின் சுபீட்சம் வெகு தொலைவில் இல்லை என்பது எல்லோருக்கும் புலனாகும் என்றார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here