லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கொள்கலன்களை ஏற்றிய கப்பல் ஒன்று நாளை சனிக்கிழமை நாட்டை வந்தடையும், என லாஃப்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த கப்பலில் சுமார் 3,000 மெட்ரிக் தொன் எரிவாயு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.