லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

0
17

லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் லிட்ரோ எரிவாயு டெர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன (Channa Gunawardana) நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (01) குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் (Muditha S.G. Peiris) புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பதவி விலகிய நிலையில் இவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

சன்ன குணவர்தன பட்டய முகாமைத்துவக் கணக்காளர்கள் (UK) மற்றும் இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் இரண்டிலும் ஒரு சக உறுப்பினராக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முதலாவது பட்டத்தைப் பெற்ற இவர் அவுஸ்திரேலியாவின் தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ (MBA) பட்டம் பெற்றார்.

சன்ன குணவர்தன தற்போது மலேசியாவில் உள்ள முகாமைத்துவம் மற்றும் விஞ்ஞான பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை படித்து வருகின்றார்.இதேவேளை முதித பீரிஸ் கடந்த 27ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here