சில பகுதிகளில் சுமார் ஒரு வாரமாக லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக எரிவாயு பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமை காரணமாக தாங்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் வாடிக்கையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலை குறித்து லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, போக்குவரத்து பிரச்சனை காரணமாக சில பகுதிகளுக்கு எரிவாயு விநியோகத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது போக்குவரத்து பிரச்சனை தீர்ந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
நேற்றைய நிலவரப்படி எந்தப் பகுதியிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படவில்லை என அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.இருந்தும் இன்றும் சில பிரதேசங்களில் லிட்ரோ கேஸ் கொள்வனவு செய்ய முடியவில்லை என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.