லிந்துலை பெயர்வெல் தோட்டத்தில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 12 வயதான சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 8.00 மணி அளவில் அவரது சடலம் பிரதேச மக்களது தகவலுக்கு அமைய காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் நேற்று சக மாணவர்களுடன் இடம்பெற்ற கருத்துமுரண்பாட்டை அடுத்தே அவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என்று காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.