லிந்துலை நகர சபையை இ.தொ.கா கைப்பற்றுவது உறுதி – லெட்சுமன் பாரதிதாஸன் தெரிவிப்பு!!

0
112

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தலவாக்கலை லிந்துலை நகர சபையை கைப்பற்றுவது இலங்கை
தொழிலாளர் காங்கிரஸ் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என தலவாக்கலை லிந்துலை நகர சபையின் சேவல் சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர்காங்கிரஸின் வேட்பாளரும் முன்னாள் நகர சபை உறுப்பினருமான லெட்சுமன்
பாரதிதாஸன் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்
தலவாக்கலை லிந்துலை நகர சபையின் கடந்த ஆட்சி காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 4 உறுப்பினர்களை கொண்டு செயற்பட்டது.இதன்போது பல்வேறு அபிவிருத்தி திட்டடங்களை செய்துள்ளது.இவ்வேலைத் திட்டங்களை பார்க்கும்போது
நிச்சயமாக இம்முறை தலவாக்கலை லிந்துலை நகர சபையில் ஆட்சி அமைப்பது இலங்கை
தொழிலாளர் காங்கிரஸ் என்பது மிக உறுதியாக உள்ளது.

கடந்த 20 வருடங்களுக்கு முன்னரே இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் தலவாக்கலை லிந்துலை நகரசபை
இருந்திருக்குமே ஆயின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்திருப்போம். தோட்ட காணிகளை பெற்றுக்கொள்வதற்கோ? அல்லது பாரிய நிதிகளை ஒதுக்கீடு செய்யவோ? மீள் அபிவிருத்தி செய்வதற்கோ?
இ.தொ.கா என்றுமே பின்வாங்கியதில்லை. அதனை பெற்றுக்கொள்ளும் பின்புலம் அதிகாரம் இ.தொ.காவிற்கு இருக்கின்றது.எனவே எதிர்வரும் காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க தயாராக இருக்கின்றது.

அந்தவகையில் தலவாக்கலையில் உல்லாச பயணிகளின் வருகையை ஊக்குவித்தல் இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் வேலை வாய்ப்புகளை ஊக்குவித்தல் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை ஏற்ப்படுத்தி கொடுத்தல் அரசசார்பற்ற
நிறுவனங்களில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற பல்வேறு பதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி 2 ஆண்டுகளுக்குள் தலவாக்கலை லிந்துலை நகரசபை முழுமையாக மாற்றி காட்டுவோம்.இத்தேர்தலில் மலையக மக்கள் மிக தெளிவாக இருக்கின்றார்கள்.மலையகத்தில் தன்னிகரில்லா தலைவன் ஆறுமுகன் தொண்டமானே
அவரின் கரங்களை பலப்படுத்த சேவல் சின்னத்திற்கு வாக்களிக்க மக்கள் தயாராகி வருகின்றனர்.

இலங்கை தொழலாளர் காங்கிரசுக்கு ஒரு அரசியல் வரலாறு இருக்கின்றது. 75 வருடங்களை கடந்த முழு நேர அரசியல் சேவை ஸ்தாபனம். ஆனால் இன்று சிலர் வியாபார நோக்கத்தை மையமாக கொண்டு அரசியலில் ஈடுபட்டு
வருகின்றனர். சிலர் கொழும்பிலே வியாபாரம் செய்து கொண்டு அரசியலுக்குள் வந்துவிட்டு நுவரெலியாவிற்கு சுற்றுலா வருவதுபோல வந்து செல்கின்றனர்.

மக்களுக்கு பணத்தையும் மதுபான போத்தல்களையும் கொடுத்து வாக்குகளை சேகரிக்க முற்படுகின்றனர். ஆனால் மலையக மக்கள் ஒருநாளும் பணத்திற்கும் மதுபான போத்தல்களுக்கும் சோரம் போகமாட்டார்கள். மக்களை எவரும் விலை கொடுத்து வாங்க முடியாது அவர்களை எவரும் ஏமாற்றவும் முடியாது.எமது மக்கள் தெளிவாகவும் நன்கு
சிந்தித்தும் செயற்பட கூடியவர்கள்.எனவே இந்த தேர்தலில் பாரிய பின்னடைவை ஐக்கிய தேசிய கட்சி சந்திக்கப்போகின்றது. வியாபார அரசியல்வாதிகள் தற்போது தோட்டங்கள் தோறும் தங்களின் கட்சி தலைவர்களுக்கு பல கொடைகளை வாரி கொடுத்து
வருகின்றனர்.அவர்களின் பசாங்கு இங்கு பழிக்காது. மக்களும் அதற்கு துணைபோகமாட்டார்கள்.எதிர்வரும் 10 திகதிக்கு பின்னர் அவர்களின் நிலையை அவர்களே புரிந்துக்கொள்வார்கள்.

 

தலவாக்கலை பி.கேதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here