லிந்துலை மற்றும் தலவாக்கலை ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் 18.02.2018 அன்று மாலை 3 மணியளவில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் ஆக்ரோயா ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் கம்பஹா பகுதியை சேர்ந்த பியூமிசாந்த் பிரசாதி பெரேரா வயது 24 எனும் யுவதியும், உயிரிழந்த இளைஞன் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
நுவரெலியா பகுதியிலிருந்து கம்பஹா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காரில் இளைஞரும், யுவதியும் மட்டும் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு, உயிரிழந்த இருவரின் சடலங்களும் லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
க.கிஷாந்தன், மு.இராமச்சந்திரன்