தலவாக்கலை லிந்துலை ராணிவத்த தோட்டத்தில் தோட்டத்தொழிலாளர் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீடீர் தீயினால் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்தை தோட்டத்தில் 04 இன்று காலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பிரதேச வாசிகள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததனால் ஏற்படவிருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
குறித்த தோட்டத்தில் உள்ள 09 இலக்க தொடர் குடியிருப்பிலேயே தீ ஏற்பட்டுள்ளது.10 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் திடீரென தீப்பறவியுள்ளது.
இந்த தீயின் காரணமாக போது வீட்டில் இருந்த பெருமதி மிக்க பொருட்கள் பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் சிவில் ஆவணங்கள் என முக்கியமான பொருட்களும் தீயில் கருகி உள்ளன.
குறித்த வீட்டில் இருந்த 08 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணை லிந்துலை பொலிஸார். முன்னெடுத்து வருகின்றனர்.
மலைவாஞ்ஞன்