மலையக தோட்டப்பகுதிகளில் தற்போது சிறுத்தைகளின் நடமாற்றத்தால் தொழிலார்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரியவந்துள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெசிபன் தோட்டத்தில் அதிகமான சிறுத்தைகள் தோட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு பகல் நேரத்தில் வந்து செல்வதாக இங்குள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்
குறித்த தோட்டத்தில் 15 இற்கு மேற்;பட்ட நாய்களை கொன்றுள்ளதாக இவர்கள் கவலையடைகின்றனர்.
தொழிலாளர்கள் தொழிலுக்குச்செல்லும் போது வீட்டில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை தனியாக விட்டுச்செல்ல முடியாமல் இருப்பதாகவும் இதனால் தொழில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கும் இவர்கள் இரவு நேரத்தில் சிறுத்தைகள் வீட்டின் முன்புறத்தில் அமர்ந்து இருப்பதாகவும் இதனால் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்;பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.
தொழிலாளர்கள் தொழில் செய்யும் தேயிலை மலைகள் தற்போது முறையாக துப்பரவு செய்யாமல் காடாக இருப்பதால் வன விலங்குகள் பதுங்கியிருக்க கூடிய நிலை காணப்படுகின்றது.
தொழில் செய்யும் இடத்தில் அச்சத்துடன் தொழில் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
தமக்கு பாதுகாப்பினை ஏற்படுத்திதருமாறு தோட்ட அதிகாரிகளிடம் கோரிய போதிலும் அவர்கள் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது தேயிலை மலைகளில் பாதுகாப்புக்காக பட்டாசுகளை வெடிக்கவைத்த பின்னரே தொழிலாளர்கள் தொழில்செய்வதில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
எனவே வன விலங்கு அதிகாரிகள் மற்றும் தோட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என இத்தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அக்கரப்பத்தனை நிருபர்