லிந்துல்ல – மட்டுக்கலை தோட்டத்தின் ஏழாம் ஆம் இலக்க வீடமைப்பு திட்டத்தில் பிறந்த சிசு ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. குறித்த சம்பவமானது கடந்த வெள்ளிக்கிழமையன்று (10) மட்டுக்கலையில் நடைபெற்றுள்ளது குறித்த சிசுவின் தாயும் பாட்டியும் சேர்ந்தே சிசுவை புதைத்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் இன்று கிடைத்த தகவலையடுத்து லிந்துல பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர். சிசுவின் தாய் மருத்துவ பரிசோதனைக்காக லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவரது பாட்டியை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு கைது செய்யப்பட்ட பெண் நாளை நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுஜீவன்