லிந்துல்ல மெரேயா தோட்டத்தில் 25 வீடுகளுக்கு அடிக்கல்!

0
131

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரத்தின் பணிப்புரைக்கு அமைய லிந்துல மெரேயா தோட்டத்தில் 25 தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் லிந்துல பிரதேச அமைப்பாளர் வீ. சிவானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், சிங். பொன்னையா, அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவர் ஜீ. நகுலேஸ்வரன், நுவரெலியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஆர். இராசமாணிக்கம், இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் உட்பட முக்கியஸ்தர்கள் வரவேற்கப்பட்டு, பெயர்ப்பலகையைத் திரைநீக்கம் செய்து அடிக்கல் நாட்டுவதை படங்களில் காணலாம்.

தலவாக்கலை கேதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here