லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்ட வீடமைப்பு திட்டத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ பத்தரகாளியம்மன் கோவிலில் இருந்த விநாயகர் சிலையும் முருகன் சிலையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத் திருட்டு சம்பவம் நேற்று அதிகாலை நடந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது’ சிலைகள் காணாமற் போன சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை தொடர்ந்து நேற்று மாலை 5 மணியளவில் குறித்த இடத்திற்கு விரைந்த லிந்துல பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
அதே சமயம் முருகன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த பட்டு கோவில் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வீதியோரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ்.