பொது சுகாதார பரிசோதகர்களின் அலட்சிய போக்கினால் பல உணவகங்களில் பழைய உணவுகள் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நேற்றிரவு லிந்துல – மெராயா நகரிலுள்ள உணவகம் ஒன்றில் பழைய உணவை விநியோகித்தமையால் வாடிக்கையாளருக்கும் குறித்த உணவக உரிமையாளருக்குமிடையே ஏற்பட்ட வாய் தகராறு பின் கைகலப்பாக மாறியுள்ளது.
இதனால் வாடிக்கையாளர் கடுமையாக தாக்கப்பட்டு லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக லிந்துல பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுஜீவன் தலவாக்கலை