லிற்றோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் நிலையில், புதிய விலைப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 175 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 3 ஆயிரத்து 940 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 70 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையாக ஆயிரத்து 582 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 32 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 740 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.