லுணுகலை பிரதான பாதையை அகலமாக்கி புனரமைக்கக் கோரி, லுணுகலை நகரில் 2000க்கும் மேற்பட்ட பொது மக்கள், கண்டன ஆர்பாட்டம் ஒன்றினை நேற்றைய தினம் முன்னெடுத்தனர்.
நகரின் பிரதான வீதியை மறித்த, அமர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் லுணுகலை பிரதேச செயலாளர் டீ.எல்.எச். திசாநாயக்கவிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
அதனையடுத்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினருடன் லுணுகலை பிரதேச செயலாளர் கலந்துரையாடி பாதையை சீரமைத்துத் தருவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.