பொகவந்தலாவ லெச்சுமி மேற்பிரிவு தோட்டத்தில் புதிதாக நிர்மானிக்கபட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் 22.04.2018ஞாயிற்று கிழமை கோலாகலமாக இடம்பெறவுள்ளது.இந் நிகழ்வில் 21ம் திகதி சனிக்கிழமை காலை 08மணி முதல் மாலை 05மணி வரை எண்ணைக்காப்பு நிகழ்வு இடம்பெற உள்ளதோடு 22ம் திகதி ஞாயிற்றுகிழமை பால்குடபவணியும் சுபரேம் காலை 10.30 மணிக்கு மஹாகும்பாபிஷேகமும் இடம் பெற உள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் அறிவித்தள்ளனர்.
அதன் பிறகு விஷேட பூஜைகள் என்பன இடம் பெற்று மதியம் அன்னதானமும் இடம் பெறவிருப்பதோடு அனைத்து பக்த அடியார்களையும் இந்த மஹாகும்பாபிஷேகத்தில் கலந்துசிறப்பித்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றனர் பொகவந்தலாவ லெச்சுமி மேற்பிரிவு ஆலய பரிபாலன சபையினர்.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)