மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 30 மில்லியன் நிதியொதுக்கீட்டின் மூலம் புப்புரஸ்ஸ (லெவலன்) தோட்டத்தில் 25 தனிவீடுகள் மக்களின் பாவனைக்கு (04-05-2018) கையளிக்கப்பட்டது.மேலும் வீடுகளுக்கு செல்லும் பாதையையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
இந் நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ராஜரட்ணம் மற்றும் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் புத்திர சிகாமணி உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்