வகுப்பறைக்குள் நுழைந்து 2 மாணவிகளின் ஆடைகளை கழற்றி பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்

0
53

டெல்லியில் மாநகராட்சி பள்ளியில், வகுப்பறையில் வைத்து மாணவிகள் 2 பேரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக அங்கு இருந்த இரண்டு பள்ளி மாணவிகளின் ஆடையை கழட்டியுள்ளார்.

மேலும் அந்த நபரும் தன் ஆடையை அவிழ்த்து வகுப்பறையின் முன் சிறுநீர் கழித்துள்ளார். இந்த சம்பவம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாணவிகள் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் தங்கள் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டு விடும் என இருவரும் அமைதியாக இருந்துள்ளனர். மேலும் பள்ளி மாணவிகளிடமும் இந்த சம்பவத்தை மறந்துவிடும் படி கூறியுள்ளனர்.

adstudio.cloud

இந்த சம்பவம் குறித்து தற்போது டெல்லி பெண்கள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெண்கள் ஆணையம் டெல்லி போலீஸ் மற்றும் கிழக்கு முனிசிபில் மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளி மீதும், அதை மறைத்த பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் பள்ளி முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷ்னர் சஞ்சய் ஜெயின் கூறியதாவது:-

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இது மாநகராட்சி பள்ளி என்பதால் சிசிடிவி கேமராக்கள் இல்லை. அதனால் குற்றவாளி குறித்த தகவல் தெரியவில்லை.

இருப்பினும் இதற்காக தனிப்படை அமைத்து அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து வருகிறோம். அதேபோல பள்ளி மாணவிகளிடம் குற்றவாளி குறித்த தகவல்களை பெற்று அவர்கள் தந்த அடையாளத்தின் அடிப்படையில் தேடி வருகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here