நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பல வங்கிகளின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வங்கி பிரதானிகள் உடனான சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் தெரிவித்தவை….
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வங்கி கட்டமைப்பை பாதுகாப்பதற்கான வேலைத் திட்டமொன்று அவசியம்.
சில வங்கிகள் மூடப்படும் அபாயம் (கட்டமைப்பு சரிவு) ஏற்பட்டுள்ளது
இலங்கையின் வங்கி கட்டமைப்பு பாரிய அளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.ஒரு நாட்டின் பொருளாதாரமும் வங்கி கட்டமைப்பும் இன்றியமையாதவை.வங்கி கட்டமைப்பு பாதிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்தை மீள்தடமேற்றுவது கடினம்