வடகொழும்பில் பர்குசன் வீதி ஓரமாக ஓடும் கால்வாய் தூர்வாரி சுத்தப்படுத்தாமல் நீண்ட காலமாக இருந்த காரணத்தால் அப்பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை சார்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட மக்கள் அடிக்கடி சிறுமழைக்கும் வெள்ளபெருக்கில் சிக்கி தம் உடைமைகளை இழந்து, தொற்று நோய்களுக்கு உள்ளாகி பெரும் துன்பங்களை சந்தித்து வந்தார்கள்.
இந்நிலைமையை கருத்தில் கொண்டு அமைச்சர் மனோ கணேசன், தாழ்நில மீட்பு கூட்டுத்தாபனத்துக்கு ரூ.40 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
படங்களில் அமைச்சர் மனோ கணேசன், துப்புரவு பணியாளர்களைஅழைத்து வந்து, பெக்கோ” இயந்திரத்தில் ஏறி கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் போதும், இப்பணிகளை பொறுப்பேற்றுள்ள மாநகர சபை உறுப்பினர் பாலசுரேஷ், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேச பொதுமக்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.