வடக்கு உலகுக்கு தெரிய காரணம் யுத்தம்; மலையகம் உலகுக்கு தெரிய காரணம் அனர்த்தம்! அமைச்சர் ராதா!

0
98

வடக்கு உலகிற்கு தெரிய காரணம் யுத்தம் மலையகம் உலகிற்கு தெரிய காரணம் அனர்த்தம் என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்.

கேகாலை மாவட்டத்தில் அன்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததினால் பாதிக்கபட்ட மக்களை சந்திபதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கையளிப்பதற்கும் மேற்படி தோட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்க் கொண்ட போதே இவ்வாறு கூறினார்.

யாழ்பாணம் இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் வாழ் பழைய மாணவர்களின் “ஏணி” தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் அமைப்பின் அங்கத்தவர் க.குமணன,; எம்.மரியதாஸ், கோலை மாவட்ட ம.ம.மு அமைப்பாளர் ஜெகநாதான் மாகாண சபை உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், உட்பட பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.

தொடர்ந்து இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள்

வட பகுதி உலகிற்கு குறிப்பாக யாழ்ப்பாணம், ஆணையிறவு, முல்லைத்தீவு, கிளிநொச்சி, நந்திக்கடல், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்கள் தெரிய வரக் காரணம் அங்கு நடைபெற்ற யுத்தமும் ஏற்பட்ட சேதங்களே. அதேபோல் மலையகம் உலகிற்கு தெரிய வரக் காரணம் மீரியபெத்த, வெதமுல்ல கயிறுக்கட்டி, களுபான, அரநாயக்க போன்ற தோட்டங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களே. அந்தவகையில் வட பகுதியும் குறிப்பிட்ட பிரதேசங்களும் அபிவிருத்தி நோக்கி செல்கின்றது.

மலையகத்தை பொருத்தவரையில் அதன் அபிவிருத்திகள் மந்த கதியிலேயே நடைபெறுகின்றது. அதனால் தற்பொழுது மலையகத்தில் மக்கள் பயத்துடன் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மலையகத் தோட்டங்கள் வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்த இந்திய வம்சாவளி மக்களாலேயே தேயிலை உற்பத்தி நடைபெற்று நாடு வளமாக உள்ளது. இந்நிலையில் தற்பொழுது அவர்கள் பாதிப்பை எதிர்நோக்குவது வருத்தத்திற்குரிய விடயமாகும்.

வடக்கு மக்களின் பிரச்சினைகளை உலகளாவிய ரீதியில் ஐக்கிய நாடுகள் சபையில் பேசுகின்றனர். ஆனால் மலையக மக்களின் பிரச்சினைகளை உள்நாட்டில் கூட பேசி தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது. வடக்கு மக்களின் பிரச்சினை ஒரு மனித உரிமை மீறல் என ஐக்கிய நாடுகள் சபையில் பேச முடியுமானால் ஏன் மலையக மக்களின் பிரச்சினைகளையும் மனித உரிமை மீறலாக கருத முடியாது.

தற்போது இந்த மக்களுக்கு இழைத்திருக்கும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமை, வீடு காணியுரிமை கிடைக்காமை, அனர்த்தங்களுக்கான நிவாரணம் கிடைக்காமை, போன்றவையும் மனித உரிமை மீறலாகும். இந்த மனித உரிமை மீறலுக்கு ஐ.நாவில் பேசி முடிவு கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. உள்நாட்டிலாவது பேசி தீர்மானிக்க வேண்டியது கட்டாயமானதொன்றாகும். இதற்காக நாங்கள் அரசாங்கத்திற்குள் இருந்தாலும் அரசாங்கத்திற்கு அளுத்தம் கொடுத்து பின்நிற்க போவதில்லை. என்று கூறினார்.

 

பா.திருஞானம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here