வடக்கு – கிழக்கு சுகாதார மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் இடமாற்றம்!

0
10

வடக்கு மற்றும் கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனபடி, வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், வைத்தியர் ஜி.சுகுணன் மட்டக்களப்பு கல்முனை வடக்கு வைத்தியசாலையின் பணிப்பாளராகவும், வைத்தியர் டி.வினோதன் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், வைத்தியர் கே.ஜி.சீ.வை.எஸ்.வீ.வீரக்கோன் ஊவா மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருமதி பி.எஸ்.என்.விமலரட்ண கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், என்.சீ.டி.ஆரியரட்ண வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டபிள்யூ.ஏ.நி. நிச்சங்க அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், எம்.எச்.எம்.அசாத் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டபிள்யூ.கே.சீ.பீ.வீரவத்த கிளிநொச்சி பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டி.எம.ஏ.கே.திசாநாயக்க கிளிநொச்சி மாவட்ட பிரந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், எஸ்.என்.வீ.பிரேமதாச முல்லைத்தீவு பொது வைத்தியசாலை பணிப்பாளராகுவம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள் எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு பின் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here