வடக்கு மக்கள் புறக்கணித்த பொருத்து வீடு நுவரெலிய பீட்ரு தோட்டத்தில் அறிமுகம் பெ.முத்துலிங்கம்!

0
147

வடக்கில் யுத்தம் முடிவடைந்தப் பின்னர் யுத்தத்தினால் வீடிழந்த வடக்கு மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் முயற்சியினை கடந்த அரசாங்கம் முன்னெடுத்தது. இம்முயற்சிக்கு இந்திய அரசாங்கமும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் உதவ முன்வந்தன. இந்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டது. இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகையில் மகிந்த தலைமையிலான அரசாங்கம் மக்களால் 2015ஆம் ஆண்டு தூக்கியெறியப்பட்டது.

ஆட்சிபீடமேறிய இன்றைய நல்லாட்சி அரசாங்கம் வடக்கின் வீ;ட்டுத் திட்டத்தை துரிதப்படுத்துவோம் எனக் கூறி வெளிநாட்டு தனியார் கம்பனியுடன் ஒப்பந்தம் செய்து இரும்புத் தகடு, மற்றும் ரெஜி போர்மைக் கொண்டு செய்யப்படும் பொருத்து வீட்டுத்திட்டத்தை வடக்கில் அறிமுகப்படுத்த முனைந்தது. இலங்கையின் காலநிலைக்கு பொருத்தமற்ற, உறுதியற்ற இவ்வீட்டுத்திட்டத் திட்டம் இலங்கை மக்களுக்கு உகந்ததல்ல என மொறட்டுவ பொறியியற் பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தைச சார்ந்த பொறியியற் வளாகத்தைச்சார்ந்த நிபுணர்கள் எனக்கூறினர்.

பின்னர் சில விதந்துரைப்புகளையும் வழங்கினர். பொறியியற் நிபுணர்களின் கூற்றை புறக்கணித்த நல்லாட்சி அரசாங்கம் காலநிலைக்கும், கலாசாரத்திற்கும் பொருத்தமற்ற இவ்வீட்டுத்திட்டத்தை வடக்கில் அமுல் படுத்த முனைந்தது. இதனை வடக்கு வாழ் மக்கள் நிராகரித்துடன் வடக்கின் அரசியற் தலைமைகளும் புறக்கணித்தன. மேலும் இவ்வீட்டுத்திட்டத்தை கைவிட்டு கற்களைக் கொண்டு கட்டப்படும் வீடுகளை அறிமுகப்படுத்தும் படி கோரியதுடன் இப்பொருத்து வீட்டுக்காக செலவிடப்படும் பணத்தைக் கொண்டு இரண்டு கல் வீடுகளைக்கட்டலாம் வடக்குத் தலைமைகள் எனக்கூறின.

வடக்கு வாழ் மக்களிடமோ அல்லது அவர்களது அரசியல் பிரதிநிதிகளிடமோ கலந்தாலோசிக்காது வெளிநாட்டு கம்பனி ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்ட நல்லாட்சி அரசாங்கம் இதனை எவ்வாறாவது அமுல் படுத்த முனைந்தது. மக்கள் எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக இத்திட்டத்தினை நிறுத்திய அரசாங்கம் மீண்டும் அதனை நடை முறைப்படுத்துவதற்காக வடக்கின் வறிய மக்களின் பொருளாதார இயலாமையைக் கருத்திற் கொண்டு இவ்வீட்டுத்திட்டத்திற்கு விரும்பியவர்கள் விண்ணப்பிக்களாம் எனக்கூறி அரசாங்க அதிபர்களினூடாக விண்ணப்பங்களைக் கோரியது. தற்காலிக குடிசைகளில் வாழும் பலர் இவ்வீட்டுத்திற்கு விண்ணப்பித்தனர். மக்களின் வறுமையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அரசாங்கம் திட்டத்தை வடக்கில் அமுல் படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தது.. மக்களின் வறுமைநிலையை சாதகமாக பயன்படுத்தி அரசாங்கம் மேற்கொள்ளும் இவ்வீட்டுத்திட்டத்தை எதிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்; திரு.சுமந்திரன் அவர்கள் ஒரு சில தினங்களுக்கு முன்னர் உயர் நீதி மன்றத்தில் இத்திட்டத்தை தடுத்து நிறுத்தும்படி கோரி வழக்கொன்றை தாக்கல் செய்யதுள்ளார்.

வடக்கில் சுசகமாக இத்திட்டத்தை முன்னெடுக்க முனையும் இன்றைய நல்லாட்சி அரசாங்கம் மறுபுறம் மலையக மக்களையும் ஏமாற்றி இத்திட்டத்தை மலையகத்தில் அமுல்படுத்தும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது. இவ்வீட்டுத் திட்டத்தை வடக்கு மக்கள் எதிர்த்த வேளை மலைய மக்களைப் பிரநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்ட வீட்டுத்திட்டம் மலையக பகுதிக்கு பொருத்தமாயின் அதனைப் பற்றி பரீசீலிக்கலாம் எனக்கூறினார். இக்கருத்தினை கருத்திற் கொண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் கவனம் மலையகம் பக்கம் திரும்பியது. அரசாங்கம் மலையகத்தில் பொருத்து வீடுகளை அமைக்க விளைகின்றோம் கூறிய வேலை மலையகத்தின் அறிவுஜிவிகள் சிலர் கண்டியில் இயங்கும் சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணத்தில் அமைத்திருந்த மாதிரி பொருத்து வீட்டை பார்வையிடச் சென்றர். இக்குழு பொருத்து வீடு ஒரு சில தினங்களுக்குள் கட்டி முடிக்கக் கூடியதொன்றாக இருந்த போதிலும் அது மலையகத்திற்கு பொருத்தமற்றது என்ற முடிவிற்கு வந்தனர். இதன் பின்னர் இக்கட்டுரையாளர் பொருத்து வீடு மலையகத்திற்கு உகந்ததல்ல என்று கட்டுரையொன்றை எழுதியதுடன் சிவில் அமைப்புகளும் மலையகத் தலைமைகளும் இதனை எதிர்க்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

ஆயினும் கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பதாக மாதிரி பொருத்து வீடு நுவரெலியாவிலுள்ள பீட்ரு தோட்டத்தின் லவர்ஸ்லீப் பிரிவில் அமைக்கப்பட்டு வருகின்றது. வடக்கில் அமைக்கப்பட்ட மாதிரி வீடே இங்கும் அமைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இறும்புத் தூண்களுக்குப் பதிலான கொன்கீரீட் தூண்களை நிறுவி பக்கச் சுவர்களுக்ளு பக்க கம்;;பிளைக் கொண்டு கூட்டினை அமைத்து அதன் மத்தியில் ரெஜி போர்மை உள்வைத்து பிளாஸ்டிக்கிலான யன்னல்களையும் வைத்துக் கட்டப்படுகின்றது. (படங்களைப் பார்க்கவும்) சிறு ஆணியைக் கூட அடிக்க முடியாத பக்கச் சுவர்களையே இவ்வீடு கொண்டுள்ளது. மேலோட்டமாகப்பார்த்தால் இவ்வீடு கண்ணைக் கவரும். அப்பாவி மலையக மக்கள் இதனைப் பார்த்தால் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வர்.

மலையக மக்களுக்கு சுமார் ஒன்றை லட்சம் வீடு தேவைப்படுகின்றது. இவ் ஒன்றை லட்சம் வீடுகளை இரண்டு வருடங்களுக்குள் கட்டி முடிக்க முடியாது. மறுபுறம் விரைவாக வீடுகளை கட்டி முடிக்க வேண்டுமாயின் புதிய தொழில்நுட்பங்களுடான விரைவில் அமைக்கக் கூடிய உறுதியான வீடுகளை கண்டுபிடிப்பது அவசியமாகும் என்பதை மறுக்க முடியாது.. மேலும் அவ்வாறான வீடுகள் நீண்டகால ஆயுளைக் கொண்டதாகவும் எமது காலநிலைக்கும் மற்றும் கலாசாரத்திற்கும் ஒத்ததாகவும் அமைய வேண்டும்.ஆனால் தற்போது பீட்ரு தோட்டத்தில் அமைக்கப்படும் வீடுகள் அவ்வாறானதல்ல. இங்கு கவனத்தில் கொள்ளக் கூடிய இன்னுமொரு முக்கிய விடயம் யாதெனில் தற்போது தென்னிலங்கையில் வீடுகளை அமைப்பதில் இரண்டு அமைச்சுகள் செயற்படுகின்றன. ஒன்று அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கீழ் இயங்கும் மலையக புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சு மற்றையது அமைச்சர் சஜித் பிரேமதாச

கீழ் இயங்கும் வீடமைப்பு அமைச்சாகும். இப்பொருத்து வீட்டுத்திட்டத்தை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் கீழ் இயங்கும் வீடமைப்பு திட்டத்தின் கீழ் அமுல் படுத்த அமைச்சர் சுவாமிநாதன் முயலவில்லை. மாறாக அமைச்சர் திகாம்பரத்தில் கீழ் இயங்கும் மலையக புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பின் கீழ் இயங்கும் ட்ரஸ் ஊடாக மலையகத்திலேயே இதனை அமுல்படுத்த முனைந்துள்ளார். மறுவகையில் கூறுவதாயின் பொருத்து வீட்டிற்கான பலிகடாவாக மலையகமக்களைப் பாவிக்க நல்லாட்சி அரசாங்கம் முனைந்துள்ளது.மலையக மக்களுக்கு கூடிய விரைவில் வீடுகள் அமைத்துக் கொடுப்பது அவசியமென்பதை மறுப்பதற்கில்லை.. ஆனால் அவர்களை ஏமாற்ற முயல்வது நியாயமல்ல. விரைவாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டியே மகிந்தவின் ஆட்சியின் கீழ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் இராமனாதன் தொண்டமான் மாடி வீட்டுத்திட்டத்தை கொண்டு வந்தார்.
மலையக மக்களுக்கு ஒவ்வாத கற்கலாளான அவ்மாடிவீட்டுத்திட்ட்த்தை மலையக சிவில் அமைப்புகளும் மக்களும் எதிர்த்தனர். இக்கட்டுரையாளர் பணிபுரியம் சமூக அபிவிருத்தி நிறுவகம் 2003 ஆம் ஆண்டு வீட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியை வரவழைத்து அவ் மாடிவீடுகளைக் காட்டியப்பின்னர் ஐ.நாவுக்கான பிரதிநிதி அவ்மாடி வீடுகள் மலையகத்தவர்களுக்கு உகந்ததல்ல எனக்கூறி நாட்டின் ஏனைய மக்களுக்கு வழங்கும் வீடுகளைப்போல் மலையக மக்களுக்கும் வழங்கும் படி இலங்கை அரசாங்கத்தைக் கோரினார். பின்புலத்தில் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் இராமநாதன் தொண்டமான் அவர்கள் மக்களின் எதிhப்பு காரணமாக மாடிவீட்டைக் கைவிட்டு தனிவீட்டைக் (கல்வீட்டைக்) கட்டிக் கொடுக்க ஆரம்பித்தார்.தற்போது அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் காணி உறுதியுடனான தனிவீட்டைக் கட்டிக் கொடுத்து வருகின்றார்.

இவ்வீடுகளை விஸ்தரித்துக் கொள்ள முடியும். ஆனால் பொருத்து வீடுகளை விஸ்தரிக்க முடியாது. அமைச்சர் பழனி திகாம்பரம் எடுத்து வரும் இவ்நல்ல முயற்சியை முறியடிக்கும் சதியென்றே இதனைக் கருதவேண்டும் .இவ் நல்ல வீட்டுத்திட்டத்தை ஒழிக்க முயலும் நல்லாட்சியினருக்கு ஒருபோதும இடமளிக்கலாகாது.

இப்பின்புலத்தைக் கருத்திற் கொண்டு பொருத்து வீடு தொடர்பாக இன்றைய அமைச்சர்களான திருவாளர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வே. இராதாசகிரு~;ணன் அரசாங்கத்திற்கு ஏற்புரை செய்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருத்து வீட்டுத்திட்டத்தை நிறுத்த வேண்டும்.மறுபுறம் மாடி வீட்டுத் திட்டத்திற்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது போல் மலையக சிவில் அமைப்புகள் மலையக மக்களுக்கு அறிவூட்டி இப்பொருத்து வீட்டிற்கு எதிராக எதிர்ப்பை தெரிவிக்க முனைய வேண்டும். எதிர்வரும் வருடத்தில் நாடு உள்ளுராட்சி மன்ற தேர்தலையும், மாகாண சபைத் தேர்தலையும் சந்திக்கவுள்ளது. இத்தேர்தல் மலையக மக்களது பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. இதனை ஒரு வாய்ப்பாக மலையக அமைப்புகள் பயன்படுத்தலாம்.இச்செயற்பாட்டில் மலையக சிவில் அமைப்புகளும் அறிவுஜிகளும் முன்னணி பாத்திரம் வகிக்க வேண்டும். ஏனெனில் விளக்கமில்லா மற்றும் வறுமையில் வாடும் மலையக மக்கள் இப்பொருத்துவீட்டினை கண்டவுடன் மயங்கி விடலாம் அல்லது ஏமாற்றப்படலாம். இருநூறு வருடங்கள் பத்தடிக்காம்பிராக்களில் வாழந்த மலையக மக்கள் சரியான வீடுகள் கிடைக்கும் இன்னுமொரு தலைமுறை இருக்கும் லயன்களில் வாழலாம் மாறாக அவர்களது உரிமை இழக்க இடமளிக்கலாகாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here