வடக்கு முதல்வர் சி,வி விக்னேஸ்வரன் ஆறுமுகன் சந்திப்பு!

0
114

யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் 08.04.2018 அன்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

IMG-20180409-WA0005IMG-20180409-WA0003

இந்த சந்திப்பின்போது, உள்ளுராட்சி சபை தேர்தலின் போது, நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் கைப்பற்றப்பட்ட பிரதேச சபைகளின் வெற்றி தொடர்பிலும், எதிர்கால அரசியல் நகர்வுகள் சம்மந்தமாகவும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, மத்திய, ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர்களான மருதபாண்டி ரமேஷ்வரன், செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here