மலையக பகுதிகளில் இடம்பெற்றுவரும் இந்துக்களின் திருவிழாக்களில் சிங்கள பெளத்தர்கள் எப்போதும் இணைந்து கொண்டாடுவது வழக்கமானது.
இது இவ்வாறிருக்க . நேற்று வட்டகொட பிரதேசத்தில் வருடாந்த தேர்த் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பல வருடங்களுக்கு பிறகு வட்டகொட பிரதேசத்தில் தெப்பத் தேர் திருவிழா 14 ஆம் திகதி முதல் கொண்டாடப்பட்டது.
இதே வேளை நேற்று இரவு வட்டகொட நகரிற்கு இரு வேறு பிரதேசங்களிலிருந்து தேர் பவனி வந்தது இதன் போது வட்டகொட நகரின் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
நேற்றிரவு 7 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் இன்று காலை 10 மணி வரையும் இயங்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது – மின் துண்டிப்பினால் பிரதேச மக்க இருளின் மத்தியில் பல சிரமங்களோடு பூஜையில் பங்கேற்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இப்பிரச்சினை தொடர்பாக கொத்மலை பிராந்திய மின்சார சபை காரியாலயத்திற்கும் வட்டகொட மண்ணின் மைந்தர்களான மக்கள் பிரதிநிதிகளுக்கும் தொலைபேசி மூலம் பல தடவைகள் அறிவித்த போதிலும் மின் இணைப்பு கிடைக்கவில்லையென பிரதேச மக்கள் கூறினர். மின் துண்டிப்பிற்கான காரணமும் அதிகாரிகளால் செரிவிக்கப்படவில்லையென்று மக்கள் சாடினர். இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சதியாகக் கூட இருக்கலாம் என வட்டகொட பிரதேச மக்கள் சந்தேகிப்பதாக கூறினர்.
சுஜீவன்