வட்ஸ்அப்பில் ‘போல்ஸ்’ அறிமுகம்

0
63

வட்ஸ்அப் செயலியில் ‘போல்ஸ்’ (“Polls”) உருவாக்கும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மெட்டாவிற்கு சொந்தமான, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் போல்ஸ் அம்சம் செயல்பாட்டில் இருக்கிறது.இதனைத்தொடர்ந்து வட்ஸ்அப் செயலியிலும் “Polls” உருவாக்கும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.வட்ஸ்அப் ‘போல்ஸ்’ அம்சம் ஒரு கருத்துக்கணிப்பு அம்சமாகும்.

இந்த போல்ஸ் அம்சம் தனிப்பட்ட சாட்கள் (Private chat) மற்றும் குரூப் சாட்கள் (Group chat) போன்ற இரண்டிலும் இப்போது பயன்படுத்தக் கிடைக்கிறது. இது பயனர்களுக்கு 12 விருப்பங்கள் வரை பதில்களுடன் தங்களுக்கு ஏற்றதாகக் கருதும் பல விருப்பங்களுக்கு வாக்களிக்க இந்த அம்சம் அனுமதிக்கிறது.

குரூப் சாட் அல்லது தனிப்பட்ட சாட்டில் நீங்கள் ஒரு போல்ஸ் அம்சத்தை நிறுவியவுடன், உங்கள் வட்ஸ்அப் கணக்கில் இருப்பவர்கள் வாக்கெடுப்பு நடத்த முடியும். வாக்கெடுப்பை உருவாக்கியவர் உட்படப் பயனர்கள் பல விருப்பங்களுக்கு வாக்களிக்க முடியும் என்று. வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

போல்ஸ் தகவலுக்கு ஒரு விருப்பத்திற்கு வாக்களிக்கலாம். ஆனால், அதிகபட்சமாக 12 விருப்பங்களுக்கு வாக்களிக்க விருப்பம் உள்ளது.

வட்ஸ்அப் போல்ஸ் அம்சத்தை நீங்கள் உருவாக்க, முதலில் உங்களுடைய வட்ஸ் ஆப்ஸை அதன் சமீபத்திய பதிப்பிற்கு நீங்கள் அப்டேட் செய்திருக்க வேண்டும். அதன்பின் வட்ஸ் அப் செயலியில் உள்ள மெனுவின் இறுதியில் போல்ஸ் ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும். இந்த போல்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இதன்மூலம் மற்றொரு மெனு திறக்கும். அதில் போல்ஸ் கேள்வி மற்றும் பதில்களை சேர்க்கக் கோரும்.

அதன்பின் கேள்வி மற்றும் பதில்களை பதிவிட்டபிறகு அனுப்பலாம். நீங்கள் போல் அனுப்பியவர்கள், அதற்கான பதில் அனுப்பலாம். நீங்கள் போல் அனுப்பியவர்கள், அதற்கான பதிலை கிளிக் செய்ய முடியும்.

போல்-இன் இறுதியில் அதற்கு கிடைத்த பதில்களை பார்க்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் ஒவ்வொரு போலுக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்தன. எந்த பதிலை அதிகம் பேர் தேர்வு செய்தனர் என்ற விவரங்களை பார்க்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here