வட்ஸ்அப் அழைப்பை நம்பிச் சென்றதால் இரு இளைஞர்களின் மரணம்!

0
9

மித்தெனிய – தோரகொலயாய பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்கள் இருவரில் ஒருவருக்கு சம்பவம் இடம் பெற்ற நாளில் வெளிநாட்டிலிருந்து வாட்ஸ்ஆப் மூலம் அழைப்பொன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாட்ஸ்ஆப் அழைப்பை மேற்கொண்ட நபரின் வேண்டுகோளுக்கு இணங்க இருவரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இருவரின் சடலங்களும் நேற்று மித்தெனிய , தேக்கவத்த பகுதியில் உள்ள வீதியில் இருந்து கண்டுப்படிக்கப்பட்டன.

நேற்று இரவு 10 மணியளவில் உந்துருளியில் பயணித்த குறித்த இளைஞர்கள் மீது 8 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here