வட்ஸ்அப் ஊடாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞன் நுவரெலியாவில் கைது

0
40

வட்ஸ்அப் ஊடாக தொடர்பாடல் வலையமைப்பை ஏற்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா, பொரலாந்த பகுதியைச் சேர்ந்த (28) வயதான ஆட்டோ சாரதி ஒருவரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடத்திலிருந்து விற்பனை செய்யப்பட்ட பின்னர் மீதமாக இருந்த 5 கிராம் 100 மில்லிகிராம் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் போதைப்பொருள் விற்பனையில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்ததுடன், நுவரெலியாவை அண்மித்த பல பிரதேசங்களுக்கு மிக நுணுக்கமான முறையில் பல நபர்களின் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளமையும் தனது தொலைபேசித் தரவுகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்தியதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

மேலும் சந்தேக நபர் மிகவும் சூட்சுமமான முறையில் முச்சக்கர வண்டியின் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சந்தேகநபரை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (29) முற்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நானுஓயா நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here