வட் வரி திருத்தச் சட்டமூலம் இன்று நாடாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்த போதும், அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.
இந்த விவாதத்தை நடத்துவதற்கான திகதி நாளைய தினம் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட் வரி திருத்தச் சட்ட மூலத்துக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடையை ஏற்படுத்தியுள்ளது இதன்காரணமாக இதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள அனுமதியில்லை.
இந்த நிலையில் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் விளையாட்டு ஒழுங்குகள் தொடர்பான சட்ட மூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.