எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த வட் வரி தொடர்பான அறிக்கை அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கூறினார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வட் வரி தொடர்பான வழக்கொன்று உயர்நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் தீர்ப்பின் அடிப்படையிலேயே வட் வரி தொடர்பில் அறிக்கையினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், வட் வரியில் பரிசீலனைகளை மேற்கொள்ள 6 பேர் அடங்கலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும். இவர்களின் திருத்தங்களுக்கமைய வட் வரி தொடர்பில் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டார்.