வட் வரி தொடர்பான விசேட மனுக்களின் வாத விவாதங்களை உயர்நீதிமன்றம் நேற்றையதினம்(21) நிறைவு செய்திருந்தது.
பிரதம நீதியரசர் தலைமையிலான மூன்று நீதியரசர்களின் கீழ் குறித்த இந்த மனு விசாரணை இடம்பெறுகிறது.
இந்த வரி அதிகரிப்பு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறவில்லை.
எனவே அதன் ஒழுங்குவிதிகள் உரியமுறையில் கடைப்பிடிக்கப்படவில்லை என்று மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இரண்டு தரப்பும் தமது எழுத்து மூல காரணங்களை எதிர்வரும் திங்கட்கிழமையன்று சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.