மேல் மாகாணத்தைவிட வட மாகாணத்தின் அபிவிருத்திக்கே அதிகளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் நேற்று (வியாழக்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நச்சுத்தன்மையற்ற மருந்துகள் பற்றி அரச பொறிமுறையினை அறிவூட்டும் மாவட்ட வேலைத்திட்டத்திற்கான கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், பாரிய யுத்தத்திற்கு முகம் கொடுத்திருந்த நாம் தற்போது சமாதானத்தை எட்டியுள்ளோம். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சகல விதமான உதவிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம்.
அதேவேளை, இனம், மதம், மொழி போன்ற வேறுபாடுகளை கலைந்து நாட்டில் தற்போது நல்லாட்சி நிலவிவருகிறது.
இந்த நல்லாட்சியில் தமிழ் மக்கள் விரும்பாத எந்தவொரு தீர்வினையும் அவர்கள் மீது திணிக்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வட மாகாணத்தை பொருத்தவரையில் அம்மக்களுக்கு நிறைய தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. அனை அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் அதற்காகவே இந்த அரசு பாடுகடுகிறது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.