வனராஜா கீழ் பிரிவு தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

0
38

ஹட்டன் கல்வி வலய கோட்டம் 2ன் வனராஜா கீழ் பிரிவு தமிழ் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவும் 2023ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை கௌரவிக்கும் விழாவும் அண்மையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் திரு. இரா. ரெங்கசாமி தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹட்டன் கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு. நல்லு சிவகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் ஹட்டன் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்களான திருமதி ஏ. தமயந்தி, திருமதி எம். சாந்தி, முன்னாள் அதிபர் திரு. எம் . சந்திரகாந்தா, தோட்ட வைத்திய அதிகாரி திரு . சண்முகராஜா ஆகியோருடன் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவச்செல்வங்கள், பெற்றோர்கள், பாடசாலை பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு தரம் ஐந்து மாணவர்களின் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here