வனராஜா பகுதியில் ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்

0
53

தலைநகரில் இருந்த சாமிமலை பகுதிக்கு வந்து சென்ற சிறிய ரக கார் ஒன்று ஹட்டன் பிரதான வீதியில் வனராஜா பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்து.

குறித்த விபத்து நேற்று மாலை (06/06) இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் ஏற்பட்ட பணி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

May be an image of grass

May be an image of tractor and grass

குறித்த சம்பவத்தில் மூன்றறை வயது குழந்தை உட்பட மூவர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்து விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில் கார் இன்னும் சற்று குடைசாய்ந்து இருப்பின் காசல்ரீ நீர் தேக்க தில் விழுந்து இருக்கும் எனவும் தெய்வாதீனமாக அவ்வாறு இடம் பெற வில்லை என்று கூறினார்.

விபத்து தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here