வனராஜா பகுதியில் வாகன விபத்து- ஜீப்வண்டியின் சாரதி காயம்!

0
130

அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் வனராஜா பகுதியில் ஜீப்வண்டி பேருந்தோடு மோதியதில் ஜீப்வண்டியின் சாரதி காயம் .

அட்டனில் இருந்து பொகவந்தலாவ பகுதியியை நோக்கி பயணித்த ஜீப்வண்டியும் பொகவந்தலாவவையில் இருந்து அட்டன் பகுதியை நோக்கி பயணித்த பேருந்தோடு ஜீப்வண்டி மோதுண்டத்தில் ஜீப்வண்டியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகிய டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த விபத்து 08.05.2018. செவ்வாய்கிழமை மாலை 05மணி அளவில் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் வனராஜ பகுதியில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

அட்டனில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி பயனித்த ஜீப்வண்டி அதிக வேகத்தின் காரணமாக வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் வலுக்குண்டதன் காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

இதேவேலை மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பிரதான வீதிகளில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுகொண்டுள்ளனர்.

02 07 08

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

எஸ்.சதீஸ், மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here