வயநாடு கோரம்: அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை- மீட்புபணி தீவிரம்

0
35

கேரளா (Kerala) மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 340-ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளாவில் கடந்த 29 ஆம் திகதி பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.இதன்காரணமாக ஏற்பட் நிலச்சரிவில் பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும், தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் உள்ளது.இன்று நான்காம் நாளாகியுள்ள நிலையில் மீட்பு பணிகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 340-ஐ கடந்துள்ளது.

நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தெர்மல் ஸ்கேனர் கொண்டு தேடும் போது சேறு, சகதிகளில் யாரேனும் சிக்கி இருந்தால் அதனை ஸ்கேனர் காட்டிக் கொடுக்கும்.

மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுவதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here