வயிற்றில் 122 முட்டைகள்… மிகப்பெரிய பர்மிய மலைப்பாம்பு பிடிப்பட்டது!

0
256

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் அதிக மலைப்பாம்புகள் இருப்பதால் இதனை கட்டுப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் குழு அமைக்கப்பட்டு, இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஆண் மலைப்பாம்புகளில் ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களை பொருத்தி முட்டையிடும் பெண் மலைப்பாம்புகளை கண்டறிந்து அவற்றை உற்பத்தி செய்ய விடாமல் தடுக்க திட்டமிட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது ஒரு பெண் மலைப்பாம்பு கண்டறியப்பட்டு அதனை பிடித்துள்ளனர். அந்த பெண் மலைப்பாம்பை பிடித்த பின்னர் அதன் வயிற்றில் 122 முட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது 18 அடி நீளமும், 98 கிலோ எடையுடனும் இருந்துள்ளது.

இந்த பெண் மலைப்பாம்பு இனப்பெருக்க காலத்தில் அதிகளவிலான முட்டைகளை உற்பத்தி செய்த மலைப்பாம்பு என்ற சாதனையை செய்திருக்கிறது. இது பர்மிய மலைப்பாம்பு என கண்டறியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here