பல சவால்களைத் தாண்டி வரலாற்றின் முதல் முறையாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரிட்சையில் 80 வீத சித்தியுடன் 9A சித்திகளையும் பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் முகமாக வித்யாலயத்தின் அதிபர் சிவநாதன் அவர்களின் தலைமையில் கோலாகலமான கல்விசார் சாதனையாளர் விழாவில் கலந்து எமது மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் ஆசிரியப் பெருமக்களையும் பாராட்டி அவர்களின் வளர்ச்சியில் நான் என்றும் துணை நிற்பேன் என உறுதி வழங்க கிடைத்தமை பெரும் பாக்கியம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரஜாசக்தி அபிவிருத்தி திட்டத்தின் பணிப்பாளர் நாயகமான பாரத் அருள்சாமி விழாவின் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“கண்டி மாவட்டத்தில் மற்றும் மலையகம் எங்கும் மாணவர்களின் திறன் அபிவிருத்திக்கு பல வேலை திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளதுடன் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு எம் அனைவருக்குமே ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக அமைய உள்ளது. அந்த வகையில் மலையக கல்வி வளர்ச்சி வரலாறு காணாத உச்சத்தை எட்ட என்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் 9A சித்திகளைப் பெற்ற மாணவி மெனுஜா அவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து கேடயம் வழங்கப்பட்ட அதே சந்தர்ப்பத்தில் சித்தி எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் உயரிய கௌரவிப்பு அளிக்கப்பட்டது.
இவ்விழாவில் வத்தேகம வலய கல்வி பணிப்பாளர் ஹாசிம் அவர்களும், கல்வி அதிகாரிகள் சக பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மடுல்கலை நகர வர்த்தக சங்கத்தினர், பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
(க.கிஷாந்தன்)