நுவரெலிய கல்வி வலயத்திற்கு உட்பட்ட கோட்டம் மூன்றில் டயகம பிரதேசத்தில் தாய் பாடசாலையாக திகழும் சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரி மாணவர்கள் குடும்ப வாழ்வாதாரத்தில் வீழ்ச்சியான சூழ்நிலையில் இருந்தாலும் அவர்களின் பெற்ற
பெறுபேறுகள் பெறும் சாதனையை நிலை நாட்டியுள்ளது.இம்முறை வெளியாகிய பெறுபேறுகள் அடிப்படையில் எம். சகுந்தலா 8A 1B சித்தியையும் வீ. பிரியன் 8A 1S .கெ. சபீனா 6A 2B சித்தியையும் என். நதியா 6A 2B சித்தியையும் 4A மற்றும் 3B சித்திகளை மேலும் 7 மாணவர்கள் பெற்றுள்ளதோடு சகல
பாடங்களிலும் 80% வீதத்திற்கு குறையாமல் பெற்றுள்ளதோடு 57க்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளமை எமது பாடசாலை வரலாற்றின் பெறும் சாதனை என கல்லூரியின் முதல்வர் செல்லையா நடராஜ் தெரிவித்தார்.
இவர் மேலும் தெரிவிக்கையில் இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் எமது பாடசாலை இத்தரத்திற்கு உயர்வடைவதற்கு காரணம் எமது மாணவர்கள் சாதாரண பெருந்தோட்ட துறையில் லயன் குடியிருப்புகளில் இருந்து வருகின்றமையும் குடும்ப கஸ்டத்தினை நன்கு உணர்ந்தவர்கள் மற்றும் எமது ஆசிரியர்களின் மனமுவர்ந்த அர்ப்பணிப்பும் மாணவர்களின் அளவு கடந்த முயற்சியும் சாதனைக்கு வித்திட்டுள்ளது.
ஆகவே இதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் கல்லூரியின் முதல்வர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அக்கரப்பத்தனை நிருபர்