வரிப்பணம் செலவு செய்வது என்பது எங்களுக்கு திருப்பி செலுத்த வேண்டிய பாரிய கடன் என நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான மயில்வாகனம் திலகராஜா(Mylvaganam Thilakaraja) தெரிவித்துள்ளார்.
ஹட்டனில்(Hatton) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் நேற்றையதினம் (19.08.2024) கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இலங்கை மலையக தமிழ் வேட்பாளர் என்பதை மிக அழுத்தமாக சொல்லுகிறோம் ஏன் என்றால் இன்னுமொரு பொது தமிழ் வேட்பாளர் களமிறங்கியிருக்கிறார் அவர்கள் அவரை பொது தமிழ் வேட்பாளர் என்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அரசியல் தீர்வினை பெய்வதற்கு என அவர்கள் கூறியிருக்கிறார்கள் அவர்கள் பொது தமிழ் வேட்பாளர் என்றால் அவர்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகள் மலையக தமிழர்களுக்கு இருக்கின்றதா அல்லது மலையக அரசியல் சமுகத்தோடு கலந்துரையாடியிருக்கிறார்களா?
அவர்கள் முன்வைக்கும் அரசியல் யோசனைகள் தொடர்பில் எங்களுக்கு ஒன்றும் தெரியாது அப்படி இருக்கும் போது அவர்கள் பொது தமிழ் வேட்பாளர்களாக இருக்க முடியாது.
எங்களை இலங்கை மலையக தமிழர் என அடையாள படுத்துங்கள் என்ற அடையாளத்தை இந்த ஜனாதிபதி வேட்பாளர் ஊடாக இலங்கை அரசுக்கு கொள்கை ஊடாக சொல்லுகிறோம் நாங்கள் மலையக இலங்கை தமிழர்கள் என சொல்லுகிறோம்.
வடக்கில் உள்ளவர்களும் கிழக்கில் உள்ளவர்களும் இலங்கை தமிழர்கள் மத்தியில் வாழ்பவர்கள் இலங்கை மலையக தமிழர்கள் மலையக பல்கலைக்கழகம் எவ்வாறு அமையலாம் சுகாதாரம் எவ்வாறு செயல்படலாம் கிராமங்கள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் போன்ற திட்டங்களை நாங்கள் முன்வைக்கின்றோம்.
அதிகார பகிர்வு சம்பந்தமாக பேசப்படும்போது மலையக தமிழ் மக்களுக்கு எவ்வாரான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்பதை எங்கள் அணி முன்வைக்கும் மலையக மக்களின் பிரச்சினைகளை கொள்கை வளர்ப்பாளர்களுக்கும் பிரதான அரசு தரப்புக்கும் அதேபோல் சர்வதேசத்துக்கும் கொண்டு செல்லுகின்ற வகையில் இந்த சுயாதின வேட்பாளர் தகுதியை பயன்படுத்துவது என்றும்,
அதன் மூலமாக மலையக மக்களின் உரிமைசார்ந்த விடயங்களை கொண்டு செல்லபடாத தலத்தில் கொண்டு செல்வதற்கு இந்த தீர்மானம் கொண்டு செல்லபட்டுருக்கிறது.
இது ஒரு தேசிய தளம் ஒவ்வொரு வேட்பாளரின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற போதும் அவர்களுக்காக செலவு செய்கின்ற தொகை 200 கோடி என பலரும் இந்த வேட்பாளர்களின் எண்ணிக்கையினை விமர்சிக்கிறார்கள் எனக்கும் அந்த விமர்சனம் இருக்கிறது அதனை அதிகரிக்க வேண்டும் எண்ணிக்கையினை குறைக்க வேண்டும் என்கிற விமர்சனம் எனக்கும் இருக்கிறது.அதனை செய்ய வேண்டியது கொள்கை வேட்பாளர்களின் வேலையாகும்.
அவ்வாறு அந்த தொகை அதிகரிக்கபடுமாகயிருந்தால் அவ்வாறு செலவழிக்க படுகின்ற 200கோடி என்பது 200வருடங்கலாக இந்த நாட்டுக்கு உழைத்து கொடுத்த மலையக மக்களுக்கு இந்த நாடு திருப்பி செலுத்துகின்ற கடன் என்பதனை நாங்கள் பகிரங்கமாக சொல்லுகின்றோம்.
200வருடங்களுக்கு அந்த 200கோடிகளை வருடத்திற்கு ஒரு கோடியினை கணக்கில் செலவிட்டு மக்களின் அபிவிருத்திக்கு பயன்படுத்தியிருந்தால் கூட இன்று பல அபிவிருத்தி திட்டங்கள் இடம் பெற்றிருக்கும் இலவச கல்வியை இந்த நாடு பெற்றுக்கொண்டது மலையக மக்களின் உழைப்பு புகையிரத வீதி பங்குச்சந்தை பெருந்தோட்ட கட்டமைப்பில் உருவானது.
இந்த நாட்டின் பொருளாதார கல்விக்கெல்லாம் அத்திவாரத்தை இட்டு கொடுத்தது பெருந்தோட்ட உழைப்பாளர்களின் உழைப்பை பெற்றுக்கொண்ட நாடு திருப்பி செலுத்துவதில் காட்டிய தயக்கங்கள் பல என குறிப்பிட்டார் .